2021 Electionadmkcongresscovid 19crimedmdkdmkelectionepsIndiammKpmkPoliticspublic interestSdpisocial mediatamilnaduttv dinakaranvideosதேனிமாவட்டம்

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் எம்.பி.யின் கார் கண்ணாடி உடைப்பு – மோதல்

191views

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் எம்.பி.யின் கார் கண்ணாடி மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போடி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் வாக்கு பதிவு மையங்களுக்கு துணை முதல்வர் மற்றும் அவரது மகன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் அதிமுகவினர் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

பெருமாள் கவுண்டன் பட்டி அருகே ரவீந்திரநாத் எம்.பி. கார் வரும் போது சில மர்ம நபர்கள் காரை நோக்கி கல் எறிந்தனர்.
வேகமாக வந்த கார் சிறிது தூரம் சென்று நின்றது, காரின் பின்புறம் முன்புறம் மற்றும் இடது ஓரங்களில் கல்லால் தாக்கியதால் கண்ணாடி உடைந்தது.

உடன் வந்த மற்றவர்கள் நின்று கல்லெறிந்தவர்களை தேடிதாக சொல்லப்படுகிறது ஆனால் கல் எறிந்தவர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.இதுபற்றி ரவீந்திரநாத் எம்பியின் உதவியாளர் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி ரவீந்தரநாத் எம்.பியிடம் கேட்டபோது திமுகவினர் தேர்தல் கலவரத்தில் ஈடுபடுகின்றனர் இதன் எதிரொலியாக என் கார் மீது கல் வீசித் தாக்கியுள்ளனர் என்றார்.துணை முதல்வரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கூறுகையில்,

திமுகவினருக்கு இந்த கலவர சம்பவத்திற்கும் தொடர்பில்லை அமமுகவினர் தான் ரவீந்தநாத் காரின் மீது கல்லை எடுத்து தாக்கியுள்ளனர் சம்பவத்தை திசைமாற்றி பேசுகிறார் என்று கூறினார்.

Leave a Response

error: Content is protected !!