அறிவாளால் வாக்கு பதிவு இயந்திரத்தை வெட்டிய குடிப்போதை ஆசாமி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆலங்குடி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி நடைபெற்று வந்த நிலையில் வாக்குச்சாவடி அருகிலேயே ஆனந்தன் என்ற நபர் குடிபோதையில் பேசிக் கொண்டிருந்த நிலையில் பாதுகாப்பில் இருந்த போலீசார் அவரை அங்கிருந்து செல்லுமாறு சொன்னபோது கம்பால் போலீஸ் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை கண்டித்துள்ளனர் இதனால் ஆத்திரம் அடைந்த அவர் எப்படி ஓட்டுப் பெட்டியை எடுத்துச் செல்கிறீர்கள் என்று பார்க்கிறேன் என்று சவால் விட்டுச் சென்றார் இந்தநிலையில் அந்த நபர் சிறிது நேரத்தில் கையில் அரிவாளுடன் சட்டை போடாமல் வேஷ்டியை மட்டும் கட்டிக்கொண்டு வாக்குச்சாவடிக்கு வந்தவர் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திற்கு சென்று அங்கு இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அரிவாளால் உடைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் மற்றும் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்து வருகின்றனர் தொடர்ந்து ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது இதனால் வாக்கு பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வெளியிலேயே காத்திருக்கின்றனர் ஆலங்குடி பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.