2021 ElectionadmkBJPCentral Govtchennaicinemacomedycongresscovid 19dmdkdmkelectionepsmmKpmkPoliticspublic interestSdpisocial mediasocietytamilnaduttv dinakaranworldஉலகம்தொழில்நுட்பம்

கருப்பு சிகப்பு நிற சைக்கிளில் வந்து வாக்கு செலுத்திய நடிகர் விஜய்

211views


தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கிய நிலையில் அரசியல் தலைவர்கள்,பொதுமக்கள்,திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.நடிகர் இளைய தளபதி விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து வாக்கு பதிவு மையத்திற்கு சிவப்பு நிற சைக்களில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து தனது ரசிகர்களுடன் சென்று வாக்களித்தார்.


நடிகர் தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் மாஸ்க் அணிந்து சென்று வாக்களித்தார். அஜித் வாக்கு சாவடிக்கு வந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கு திரண்டனர். அப்போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார்.இதை பார்த்த நடிகர் அஜித் ரசிகரின் செல்போனை பிடிங்கி வைத்த சம்பவம் நெட்டிசன்களிடையே பேசும் பொருளாக மாறி உள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தனது மகள்களுடன் சென்று வாக்களித்தார்


நடிகர் ரஜனிகாந்த்,சூர்யா,தனுஷ்,சிவகார்த்திகேயன் மற்றும் விக்ரம் உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள் தனது வாக்கினை பதிவு செய்தனர்.
முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
இதே போல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

Leave a Response

error: Content is protected !!