2021 ElectionadmkBJPchennaicinemadmdkdmkelectionIndiaIT RaidmmKpmkPoliticssocial mediasocietytamilnadu

சென்னை துறைமுகம் தொகுதி பாஜக நிர்வாகி வீட்டில் ரூ. 8.50 லட்சம் பறிமுதல்!

182views


சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளராக சேகர் பாபுவும், அதிமுக கூட்டணி பாஜக சார்பில் வினோஜ் பி. செல்வமும் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் பாஜகவினர் தேர்தல் அலுவலகத்தில் வைத்து, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவின் தமிழன் பிரசன்னா தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார்.

இதே போல் ஆங்காங்கே பாஜகவினர் பண வினியோகம் செய்வதையும் திமுகவினர் கையும் களவுமாக பிடித்தனர்.
இந்நிலையில், புகாரின் பேரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள், கொண்டித் தொப்பு பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி ஷியாம் சுந்தர் என்பவர் வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது, கணக்கில் வராத 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பிரதமர் மோடி நாடுமுழுவதும் சுற்றுப் பயணம் செய்து,ஒழுக்கம் பற்றியும் வாரிசு அரசியல் பற்றியும் போதனைகள் செய்து வரும் நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, சிக்கி வரும் சம்பவங்கள், அந்த கட்சியினரும்,பிற கட்சிகளை போன்றவர்களே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response

error: Content is protected !!