வானதிக்கு ஆதரவாக மதுவந்தி பிரச்சாரம் – பாஜகவினர் அதிர்ச்சி, எதிர் கட்சிகள் குஷி!

கோவை தெற்கு தொகுதியில் தேசிய கட்சிகளுடன் கமலஹாசன் போட்டியிடுவதால் இந்த தொகுதி ஸ்டார் தொகுதியாக காணப்படுகிறது.
கோவையில் இத்தொகுதியில் மட்டுமே நடிகர் நடிகர்கள் அதிகம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகை நமிதா, நடிகர் ராதாரவி பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று நடிகர் ஓய்.ஜி. மகேந்திரனின் மகளும், பிரபல நடன கலைஞருமான மதுவந்தி கோவை சிவனந்தாகாலனி பகுதியில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
சமூக வலைதளங்களில் தவறான கணக்குகள் மட்டும் தவறான தகவல்களை கொடுத்ததால், மக்களிடம் நகைச்சுவை பிரபலமானார் மதுவந்தி.

அவர் பிரச்சாரம் செய்வது, வானத்திக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என ஒரு தரப்பு பாஜகவினர் கருதுவதாக கூறப்படுகிறது.
காரணம் அவர் எதாவது பேசினால், அதனை வீடியோ எடுத்து வெளியிட்டாலே, அது வானதிக்கு சிக்கலாகி விடும் என கருதுகின்றனர்.
மற்றொரு புறம், வானதி எதிர்ப்பாளர்கள் மதுவந்தி வருகையை குஷியாக கொண்டாடி வருகின்றனராம்.