2021 ElectionadmkBJPcongresscovid 19dmdkdmkelectionIndiapmkPoliticssasikalasocial mediatamilnaduமதுரை

மதுரையில் சவுராஷ்டிரா, தெலுகு மக்கள் அதிகம் உள்ளனர்- மோடி பெருமிதம்!

197views

மதுரைக்கு வணக்கம்…
நல்லா இருக்கீங்களா?
மதுரை வந்ததில் எனக்கு மகிழ்ச்சி
மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகளை தரிசித்ததில், நான் ஆசீர்வதிக்க பட்டவனாக உணர்கிறேன்.
மிச்சமுள்ள என் வாழ்நாள் முழுவதும் மீனாட்சி கோயிலின் நினைவுகளில் மூழ்கி இருப்பேன்.

இந்த மண்ணுடன் தொடர்பு கொண்ட மகாத்மா காந்தி, முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரன், காமராஜர் ஆகியோரை வணங்குகிறேன்.

தமிழ் பண்பாட்டின், நாகரிகத்தின் தொட்டில் – மதுரை.
சங்கம் வளர்த்த மதுரை; ஞானம் வளர்த்த மதுரை;
அதற்காக பாடுபடும் அனைவரையும் பாராட்டுகிறேன்.

மதுரையில் சௌராஷ்டிரா, தெலுங்கு சமூக மக்கள் அதிகம் உள்ளனர். ஒரே நாடு; பெருமை மிகு நாடு என்பதன் அடையாளமாக மதுரையை பார்க்கிறேன்.

தென் தமிழகம் எம்.ஜி.ஆருடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.
அவர் நடித்த மதுரை வீரன் படத்தை யாராவது மறக்க முடியுமா?
அந்த படத்தில் பாடல் பாடிய சவுந்தரராஜனையும் யாராலும் மறக்க முடியாது.
மதுரை மக்கள் எம் ஜி ஆருக்கு பின்னால் வலிமையான பாறை போல இருந்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் தென் தமிழகத்தில் இருந்து 3 முறை வென்றுள்ளார்.
தென் தமிழக மக்கள் மீது எம்.ஜி.ஆர் கொண்டிருந்த பார்வையும், பாசமும் எப்போதும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்க கூடியவை.

130 கோடி இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் நீர் பாசனம், சாலை உள்ளிட்ட உள் கட்டுமான வசதிகளுக்கு அதிகமாக செலவிடப்பட்டு உள்ளது.
238% அதிகமான ரயில்வே கட்டுமான திட்டங்கள் தமிழகத்திற்கு அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்திற்கு நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
அடுத்த ஆண்டுகளில் இன்னும் நிறைய திட்டங்கள் அளிக்கப்படும்.
நாடு முழுவதும் வைஃபை சேவை விரைவில் அளிக்கப்படும்.

சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல் நடந்த மண் – மதுரை. நீருடன் உள்ள தொடர்பை திருவிளையாடலும், மதுரையும் அதிகமாக உணர்த்துகின்றன.
அதற்காகவே தண்ணீர் மேலாண்மையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
மத்திய மாநில அரசுகள் இணைந்து 24 மணி நேரமும் தடையில்லா தண்ணீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றன.
சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கும் மதுரையில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்களை வெற்றி பெற செய்தால், இன்னும் மிக அதிகமான திட்டங்கள் தமிழகத்திற்கு வரும் என்று அர்த்தம்.
விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும், உணவு பத படுத்தும் வேலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
வர்த்தகத்தை சுலபமாக மாற்ற பல சீர் திருத்தங்களைச் செய்து வருகிறோம்.
வரி என்கிற பெயரில் வரி கொடுமை இருக்க கூடாது என்பதல்ல வரி சுமையை குறைத்து கொண்டிருக்கிறோம்.

அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 7 ஜவுளி பூங்கா வர உள்ளது.

திமுக, காங்கிற்கு பேசுவதற்கு சரியான திட்டம் இல்லை. அவர்கள் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் தமிழகத்தின் பாதுகாவலர்களாக தங்களை சித்தரித்து கொள்கிறார்கள், அது உண்மை அல்ல.
ஜல்லிக்கட்டு தடை செய்யும் நடவடிக்கையை 2011 இல் செய்தது காங் அரசு.
2016 தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டை தடை செய்வோம் என காங்கிரஸ் சொல்லியுள்ளது.
ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை நான் உடனே அனுமதி அளித்தேன்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ், திமுக நினைக்கவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வர வேண்டும் என்று நினைத்தது பாஜ அரசு.

எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வரும்.
சரியான நடைமுறையில், உறுதியாக வரும்.
மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்கும்.

மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மொழியில் படிக்கும் வசதியை அமல் படுத்தி உள்ளோம்.

தேவேந்திர குல வேளாளர் விவகாரத்தில் திமுக, காங் பொய் சொல்கிறது.
தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்கள் கண்ணியத்தை மீட்ட கட்சிகள் அதிமுக, பாஜக.

திமுக, காங்கிரஸ் கட்சிகளால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது.
மதுரையை வன்முறை நகரமாக மாற்ற முயற்சித்தார்கள் திமுகவினர்.
பெண்களின் சக்தியை எப்படி மதிக்க வேண்டும் என்பதை சொல்லும் நகரம் மதுரை.
மீனாட்சி, கண்ணகி, ராணி மங்கம்மாள் ஆகியோரை போற்றிய ஊர் மதுரை.
ஆனால், பெண்களை அவமானப்டுத்தும் வேலைகளை செய்கிறார்கள் திமுக, காங் கட்சியினர்.
இதை பார்த்து நான் ஆச்சரியம் அடைய மாட்டேன்,
ஏனெனில் அது அவர்களுடைய குணம்.

மதுரை தூங்காநகரம் என புகழ்பெற்ற நகரம்.
இந்த மதுரை அரசியல் முக்கியத்துவத்தைக் கொடுப்பதிலும் தூங்காத நகரம்.
இது, அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பதில் கூட தூங்காமல் இருக்கும் என நம்புகிறேன்.

Leave a Response

error: Content is protected !!