
சவுதி பட்டத்து இளவரசர் சல்மான், தனக்கு எதிராக செய்தி வெளியிட்ட, வாசிங்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தியாளர் ஜமால் கசோக்கியை துண்டு துண்டாக வெட்ட உத்தரவிட்டதாக, அமெரிக்க தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, அக்டோபர் 2ஆம் தேதி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து, ஒரு கூலிப்படை கும்பலால் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார். குறிப்பாக, அவரது எழுதும் விரல்கள் துண்டிக்கப்பட்டன. இந்த காட்டிமிராண்டித்தனமான செயலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் கூறி வந்தார்.
இருந்தாலும் அவர் மீதே அனைவரின் சந்தேக நிழலும் விழுந்தது. இந்நிலையில் சல்மானின் ஒப்புதலின் பேரில் தான், இந்த கொடூர கொலை நிகழ்ந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தச் சம்பவத்திற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமெரிக்காவின் இந்த அறிக்கை பொய் என சவுதி கூறியுள்ளது.