Uncategorized

உரிமையாளரையே போட்டுத் தள்ளிய சேவல் – காவல்நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

444views

ஆந்திர மாநிலத்தில் சேவல் ஒன்று அதன் உரிமையாளரையே போட்டுத் தள்ளியதால், காவல்துறையினர் அதனை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.  

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் கோவில் அருகே ரகசியமாக சேவல் சண்டை நடைபெற்று வந்துள்ளது. அந்த சண்டையில் தனது சேவலையும் பங்கெடுக்கச் செய்ய, அதன் உரிமையாளர் சதீஷ் கொண்டு சென்றுள்ளார். சேவலின் காலில், கத்தியை வைத்துக் கட்டியுள்ளார். அப்போது, சேவல் அங்கிருந்து தப்ப முயன்று, உரிமையாளரை நோக்கி பறந்துள்ளது. அப்போது, அதன் காலில் கட்டப்பட்டிருந்த கத்தியால், சரமாரியாக வெட்டுப்பட்ட, சதீஷ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். இதனையடுத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் அந்த சேவலை பிடித்து, காவல்நிலையத்திற்கு கொண்டு போய் , கட்டி வைத்துள்ளனர். இதனை படம் பிடித்த சில உள்ளூர் ஊடகங்கள், சேவலை காவல்துறை கைது செய்து விட்டதாக பரப்பியுள்ளனர். இதனை காவல்துறை மறுத்ததோடு, அந்த சேவலை நீதிமன்றத்தில் காட்டிவிட்டு, பண்ணைக்கு அனுப்பி விட்டதாக விளக்கம் அளித்தனர்.

சேவல் சண்டை தெலங்கானாவில் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணம் ஈட்ட சேவலை, பகடைக்காயாய் பயன்படுத்த நினைத்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Leave a Response

error: Content is protected !!