BJPcongress

கோட்சேவுக்கு கோவில் கட்டியவர் காங்கிரசில் இணைந்தார் – சிந்தாந்த பலவீனத்தால், அழியும் காங்கிரஸ்!

199views

பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் கொள்கை அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லாததால், பல காங்கிரஸ் தலைவர்கள் அணி அணியாக பாஜகவில் இணைந்து வருகின்றனர். அவர்கள் பார்வையில், இரு கட்சிகளும் ஒன்று என நினைகின்றனர். நேருவின் சோசலிச, மதச்சார்பற்ற கொள்கைகள் காங்கிரசில் நீர்த்துப் போய் வருகின்றன.  

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், கோட்சேவுக்கு கோவில் கட்டிய இந்து மகா சபை தலைவரும், வார்டு கவுன்சிலருமான பாபுல் சவுராஷியா என்பவர் காங்கிரசில் இணைந்துள்ளார்.  

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், நரேந்திர மோடி, காங்கிரசில் இணைந்தால் கூட சேர்த்துக் கொள்வோம் என கூறியது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கமல்நாத்தின் ஆட்சியை கவிழ்த்து, அங்கு பாஜக ஆட்சியை வரவழைத்ததே, கொள்ளையில் நீர்த்துப்போன காங்கிரஸ் தலைவர்கள் தான். அதில் இருந்து பாடம் கற்காமல் மேலும், பாஜக சிந்தனையாளர்களை காங்கிரஸ் தனது கட்சியில் சேர்த்து வருவது அரசியல் விமர்சகர்கள் மத்தியில், நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

 . தற்போது காங்கிரசில் இணைந்துள்ள பாபுல் சவுராஷியா பாரம்பரிய காங்கிரஸ் கட்சிக் காரர் ஆவார். கடந்த 2014ஆம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில், அவருக்கு சீட் தராததால், இந்து மகா சபையில் இணைந்து, கோட்சேவுக்கு கோவில் கட்டினார். தற்போது, மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார். அடுத்த முறை யாருக்கு கோவில் கட்டுகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Response

error: Content is protected !!