BJPcricket

விளையாட்டு மைதானங்களை தனியாருக்கு லீசுக்கு விட மத்திய பாஜக அரசு முடிவு

425views

டெல்லியில் உள்ள பிரபல விளையாட்டு மைதானமான ஜவஹர்லால் நேரு, மைதானம் உள்ளிட்ட சில மைதானங்கள் முதல்கட்டமாக நீண்ட கால அடிப்படையில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து, நாடுமுழுவதும் கிரிக்கெட் மைதானங்கள் தனியாருக்கு லீசுக்கு விடப்பட உள்ளன.

நகரின் மையப்பகுதிகளில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்கள், பெரும்பாலும், விளையாட்டு சார்ந்த நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடுமுழுவதும் உள்ள 100 அரசின் சொத்துக்களை, தனியாருக்கு லீசுக்கு விடுவதன் மூலம் 2.5 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் பலே திட்டத்தை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக நாடுமுழுவதும் உள்ள கிரிக்கெட் மைதானங்கள், 30 ஆண்டுகால லீஸ் அடிப்படையில், தனியார் விளையாட்டு அமைப்புகளுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளன. அப்படி விடப்படுமானால், அந்த மைதானங்களுக்குள் நுழையவே தனியாரிடம் பணம் கொடுத்து, அனுமதி பெற வேண்டும்.  தனியார்கள் அந்த மைதானத்தை விளையாட்டு நோக்கங்களுக்கு பயன்படுத்துவதோடு, வருவாய் ஈட்ட மேலும் பல வழிகளை கையாள்வர்கள் எனத் தெரிகிறது.

Leave a Response

error: Content is protected !!