BJP

நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என கொத்து கொத்தாக பிரபலங்களை தூக்கும் மமதா பானர்ஜி – பாஜக அதிர்ச்சி!

451views

இந்திய அளவில் பாஜகவிற்கு அரசியல் ரீதியாக கடும் போட்டியாக விளங்கும் ஒரே தலைவராக மமதா பானர்ஜி மட்டுமே உள்ளார். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஜெயலலிதா போல், அனைத்து மக்களுமான அரசியலை செய்து, தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார் மமதா பானர்ஜி.

அதே நேரம் பிரதான எதிர்கட்சிகளான இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரசும் முற்றிலும் மக்களின் நம்பிக்கை இழந்து விட்டன. இந்த இடத்தை பாஜக நிரப்ப முயன்று வருகிறது. இதன் அடிப்படையில் திரிணாமுல் காங்கிரசில் இருந்தும், வெளியில் இருந்தும் கொத்து கொத்தாக தலைவர்களை தூக்கி வருகிறது பாஜக. இந்நிலையில் பாஜகவுக்கு பகிரங்க சவால் விடுத்த மமதா பானர்ஜி, என்னை மேற்கு வங்கத்தில் புதைத்தால், டெல்லியில் எழுவேன் என பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

மேற்கு வங்க அரசியலை பொருத்தவரை, பாஜக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதே நேரம், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு சிறிய அளவில் பின்னடைவுகள் ஏற்படலாம். பெரும்பாலும், இடதுசாரிக் கட்சிகளுக்கும், காங்கிரசுக்குமே பலத்த அடி காத்திருக்கிறது. இங்கு கவனிக்கத்தக்க விசயம், இடதுசாரிகளும், காங்கிரசும் பிரிக்கும் ஒவ்வொரு ஓட்டுக்களும், பாஜகவிற்கே சாதகமாக அமைய உள்ளது.

இதனிடையே ஏரளானமான பிரபல நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் மமதா பானர்ஜியின் முன்னிலையில் தங்களை திரிணாமுல் காங்கிரசில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

நடிகர்கள்  Saayoni Ghosh, June Maliya, Sudeshna Roy, Manali De, Kanchan Mullick மற்றும் இயக்குநர்  Raj Chakraborty உள்ளிட்ட பலர் திரிணாமுல் காங்கிரசில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.  இது பாஜக வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response

error: Content is protected !!