BJPtamilnaduvideosviral

ஜெய் ஸ்ரீ ராம் என கக்கூஸ் உடைப்பு – பாஜக ஆதரவாளர்கள் விசித்திர செயல்!

552views

நீங்கள் நினைப்பது போல், இவர்கள் உடைப்பது பிற மத வழிபாட்டுத் தலங்களை அல்ல. உத்தரப்பிரதேச மாநிலம் ஷகாரன்பூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கழிப்பிடம் உள்ளது. இதன் அருகில் கோவிலும் உள்ளது. கோவில் அருகே கழிப்பிடம் உள்ளதால், கோவிலின் புனிதம் கெட்டுப் போவதாக கூறி, பாஜகவின் துணை அமைப்பான பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டவாறு, கழிப்பிடத்தை இடித்தனர்.


கோவில் கட்டுவதை விட கழிப்பிடம் கட்டுவதற்கே முக்கியத்துவம் கொடுங்கள் என மோடி கூறிய நிலையிலும், உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையிலும், தங்களது கோரிக்கைகளை அரசுக்கு இவர்கள் தெரிவித்திருந்தால், அவர்களே மாற்று ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆனால், ஆயுதங்களுடன் வந்து பொதுமக்களையும், கழிப்பிடத்தில் இருந்தவர்களை திடீரென அச்சுறுத்தும் வண்ணம் அவர்கள் இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு மேல் அவர்கள் இடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டும் காவல்துறை சம்பவ இடத்திற்கு வரவில்லை.

Leave a Response

error: Content is protected !!