chennaistory

சைவத்தை வீழ்த்தும் அசைவ உணவுகள்! சென்னையில் 30 ஆண்டுகால உயர்தர சைவ ஹோட்டல் மூடல்!

174views

சென்னையில் திரும்பும் பக்கம் எல்லாம் பிரியாணிக் கடைகள், புற்றீசல் போல் முளைத்து வரும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த, உயர்தர சைவ ஹோட்டல் மூடப்பட்டுள்ளது.


உலகத்திலேயே சைவ உணவுப் பழக்கம் அதிகம் உள்ள நாடு இந்தியா மட்டுமே. அதிலும் வட இந்தியாவில் சைவ உணவுப் பழக்கம் உச்ச கட்டத்தில் இருக்கிறது. ஆனால் தென்னிந்தியாவிலோ நிலைமை தலைகீழ்.


அதே நேரம் சைவப் பழக்கத்தை மக்களிடம் திணிக்கும் முயற்சிகள் நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கே வீடு என்கின்ற அக்கிரம முறை, தமிழகத்தில் பரவலாக உள்ளது. ஆனால் பெரும்பான்மை தமிழக மக்கள் எப்போதுமே அவைசப் பிரியர்களாகவே உள்ளனர்.


தமிழகம் முழுவதும் புதிது புதிதாய் தொடங்கப்படும் பிரியாணி கடைகளும், கிரில் சிக்கன் கடைகளுமே இதற்கு சான்று. ஞாயிற்றுக் கிழமைகளில், ஹோட்டல் புகாரி, அஞ்சப்பர், சுக்குபாய் பிரியாணி, சேலம் ஆர்ஆர் பிரியாணி, ஐதராபாத் எஸ்எஸ் பிரியாணி உள்ளிட்ட பல கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவதையும், பல மணி நேரம் வாடிக்கையாளர்கள் காத்திருந்து சாப்பிட்டுச் செல்வதையும் பார்க்க முடியும்.


இந்நிலையில், சென்னை அண்ணாசாலை தாராபூர் டவரில் கடந்த 30 வருடமாக செயல்பட்டு வந்த, மதுரா ஹோட்டல் தற்போது மூடப்பட்டுள்ளது. நியூ உட்லேன்ஸ்ட் ஹோட்டலுக்கு சொந்தமான இந்த கடையில், 90 ஊழியர்கள் வரை வேலை செய்து வந்தனர். ரசம் இட்லிக்கு பெயர் போன இந்த கடையில், வியாபாரம் ஏற்கனவே படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு மொத்தமாக வியாபாரத்தை சாய்த்து விட்டதாக ஹோட்டல் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.


55 வயதுக்கு மேற்பட்டவர்களை ஹோட்டலில் வேலைக்கு வைக்கக் கூடாது என்ற விதியும் கடும் பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஹோட்டலுக்கு அருகே அசைவ உணவுகளை வழங்கும் புகாரி ஹோட்டலின் வர்த்தகம், கொரோனா காலத்திலும் படிப்படியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவை விரட்ட அசைவ உணவுகளை சாப்பிடலாம் என்ற மருத்துவர்களின் அறிவுரையையும், அசைவ உணவுக் கடைகளின் வளர்ச்சிக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
மக்களின் புரதத் தேவை, மற்றும் சுவை காரணமாக பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளின் விற்பனை, அசைக்க முடியாத ஒன்றாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response

error: Content is protected !!