BJPtamilnadu

“மண்டபத்தில் போதுமான வசதி இல்லை” – எஸ்.பி-யின் சட்டையை பிடித்து தள்ளிய பாஜக-வினர்..!

295views

கல்யாண மண்டபத்தில் போதுமான வசதி இல்லை என கூறி கைது செய்யப்பட்ட பாஜகவினர் எஸ்பியின் சட்டையை பிடித்து இழுத்து  வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணியில் நேற்று பாஜக-வினர் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தினர். இதையடுத்து, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைதாகினர்.

கைதானாவர்கள் அனைவரையும் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் தலைமையிலான போலீசார், ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது அந்த மண்டபத்தில் மின்விசிறி உட்பட அடிப்படை வசதிகள் இல்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி கொண்டேமண்டபத்தை விட்டு வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய எஸ்பி அரவிந்தனின் சட்டையை பிடித்து இழுத்து வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

பிறகு பாஜக-வை சேர்ந்த அண்ணாமலை அங்கிருந்தோரை சமாதானம் செய்து, போராட்டத்தை கைவிட செய்து திரும்பவும் மண்டபத்திற்குள்ளே அழைத்து செய்தார்.

மண்டபத்தில் திருமணத்திற்கு வந்தவர்கள் சொற்றில் உப்பில்லை, மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டார் சரியாக கவனிக்கவில்லை என கலாட்டா செய்வது போல, கைதான பாஜக-வினர் மாவட்ட எஸ்.பி-யின் சட்டையை பிடித்து இழுத்து கலாட்டா செய்தது காவல்துறையினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது.  

எஸ்பியின் சட்டையை பிடித்து இழுத்து வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Response

error: Content is protected !!