BJPtamilnadu

பாஜகவின் வேல் யாத்திரை பிசுபிசுத்தது.. மக்கள் ஆதரவு இல்லை.. – மறைமுக அனுமதி அளித்த காவல்துறை!

262views

தமிழகத்தில் பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சொன்ன தமிழக அரசு, பின்வாசல் வழியாக இன்று அனுமதி வழங்கியுள்ளது.


திருத்தணிக்கு சென்னையில் இருந்து பாஜக தலைவர் எல்.முருகன், அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் சென்றனர். எல். முருகன் மட்டும், கையில் வேலை வைத்து, போஸ் கொடுத்து வந்த நிலையில், வேனுக்குள் இருந்து திடீர் அவதாரம் எடுத்தார் எச்.ராஜா. இதனை எதிர்பார்க்காத முருகன், ராஜாவை வெறிக்க வெறிக்க பார்த்தார்.

பின்னர் நசரத் பேட்டை அருகே போலீசார் பாஜகவினரின் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளின் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதித்தனர். இதனிடையே பாஜக கொடி போட்ட ஒரு வாகனம், போலீஸ் அதிகாரியை இடிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு வழியாக 10 முதல் 20 பாஜக நிர்வாகிகள் திருத்தணி புறப்பட்டனர். பாஜகவின் இந்த யாத்திரையைக்கு போலீசார் அனுமதி தரவில்லை எனக் கூறி ஆங்காங்கே சில இடங்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், எந்த இடத்திலும் 100க்கும் அதிகமாக மக்கள் கூடவில்லை. எனவே பாஜக வழக்கமாக நடத்தும், நிகழ்ச்சிகளை போன்றே, இந்த யாத்திரையும் பிசுபிசுத்தது.


அதே நேரம் போலீசார் பாஜகவின் யாத்திரைக்கு தடை விதித்துள்ளதால், அமைதியாக இருந்த எதிர்கட்சிகள், தற்போது, பாஜகவின் யாத்திரைக்கு காவல்துறை மறைமுக அனுமதி வழங்குகியுள்ளதால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இடதுசாரி அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அம்பேத்கரிய இயக்கங்கள், பெரியார் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள், எதிர் போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Response

error: Content is protected !!