tamilnadu

பாஜகவில் இருந்து கூண்டோடு விலகிய 17 கவுன்சிலர்கள்!

592views

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கவுன்சிலர்கள் 17 பேர் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகி, மமதா பானர்ஜிக்கு வரும் தேர்தலில் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும், அண்மைக் காலமாக பாஜகவை வலுப்படுத்தும் விதமாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை, பாஜகவில் இணைத்து வந்தனர். கடந்த சில வருடங்களாக இந்த பணி தீவிரமாக நடைபெற்றது. அங்கு வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு, கூர்க்கா ஜன முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து, விலகி பாஜகவில் சேர்ந்த, 17 கவுன்சிலர்கள், அந்த கட்சியால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை எனக் கூறி, பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். இவர்கள் அனைவரும், டார்ஜிலிங் முனிசிபல் கார்ப்பரேசன் கவுன்சிலர்கள் ஆவார்கள். எதிர்வரும் தேர்தலில் மமதா பானர்ஜிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Leave a Response

error: Content is protected !!