cinema

“விஜய் மக்கள் இயக்கத்துக்கும் அவருக்கும் சம்மந்தமில்லப்பா” – யார் சொல்றான்னு தெரியுமா..?

169views

தமிழகத்தில் சினிமா நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவதும்,ஆட்சி அதிகாரத்தில் அமர்வதும் புதிதல்ல.. எம்..ஜி.ஆர். தொடங்கி ஜெயலலிதா, விஜயகாந்த், என தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைகள் சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான்..

அந்த வகையில் நடிகர் விஜய், தமிழகத்தில் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் நடித்த படங்களில் அரசியல் குறித்தான கருத்துக்கள் நிறையவே இடம் பெற்று வருகின்றன. இதற்காக அவருடைய அரசியல் பிரவேசத்திற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.

விஜய் தனது அரசியல் முடிவை இந்த சட்டமன்ற தேர்தலில் அறிவிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களின் எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் தற்போது ஒரு செய்தி வைரலானது. விஜய் கட்சி தொடங்குவதாகவும், அரசியல் கட்சியாக விஜய் மக்கள் இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என பதிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் வேகமாக சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆனால் இந்த செய்தி தவறானது என்றும், விஜய் மக்கள் இயக்கம் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரால் 1993-ல் தொடங்கப்பட்டது என்றும், விஜய்-க்கும் இந்த இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என விஜயின் தந்தையே ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியல் பிரவேசம் குறித்து ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததற்கு காரணம் அந்த இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக தான் என்று கூறினார்.

விஜய் பெயரை தனது இயக்கத்திற்கு வைத்துக்கொண்டு அவரின் ரசிகர்களை இயக்கத்தின் உறுப்பினர்களாக வைத்துக்கொண்டு விஜய்-க்கும், இந்த இயக்கத்திற்கும் தொடர்பில்லை என எஸ் ஏ சந்திரசேகர் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், விஜய் அரசியலுக்கு நுழைகிறார் என்ற செய்தி தவறானது என விஜயின் அதிகாரப்பூர்வ ஊடக தொடர்பாளர் ரியாஸ் தனது டுவிட்டர் பதிவில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave a Response

error: Content is protected !!