crimeIndia

குழந்தையை காப்பாற்ற 241 கி.மீ நிற்காமல் சென்ற ரயில்.. – இறுதியில் நடந்த டுவிஸ்ட்டால் கோபமடைந்த போலீஸ்..!

192views

உ-பி மாநிலத்தில் குழந்தை கடத்திய விவகாரத்தில் துரிதமாக செயல்பட்ட போலீஸ் இறுதியில் எரிச்சலான சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

உத்தரபிரதேசம் மாநிலம், லலித்பூர் ரயில் நிலையம் அருகே கடந்த 25-ஆம் தேதி 3 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டதாக குழந்தையின் தாய் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர் ஒருவர் குழந்தையை தூக்கிக்கொண்டு, ரப்தி சாகர் சிறப்பு ரயிலில் ஏறியது தெரியவந்தது.

உடனடியாக, வையர்லெஸ் ஃபோன் மூலம் அந்த ரயில் ஓட்டுநரை தொடர்பு கொண்ட போலீசார், ரயிலை இடையில் எங்கும் நிறுத்தாமல் போபால் செல்லும்படி தெரிவித்துள்ளனர். இதனால், ஓட்டுநர், சுமார் 241 கிலோமீட்டர் வரை ரயிலை எங்கும் நிறுத்தாமல், போபால் கொண்டு சேர்த்தார்.

அப்போது அங்கிருந்த ரயில்வே போலீசார், ரயிலில் இருந்த மர்ம நபரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை வைத்திருந்த நபர் குழந்தையின் தந்தை என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில், கணவன்- மனைவிக்கு இடையில் நடந்த பிரச்சனையால், இந்த கடத்தல் நாடகம் அரங்கேறியது தெரியவந்தது.

பின்னர் பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்த போலீசார்,  இருவரிடமும் கராராக பேசி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Leave a Response

error: Content is protected !!