BJPPoliticstamilnadu

மனு தர்ம கருத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பே எதிர்ப்பு – இது தெரியாமல் திருமாவளவனை எதிர்க்கும் தமிழக பாஜக!

595views

மனு தர்மம் என்றால் என்ன என்றே தெரியாமல், அதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர், நடிகர் குஷ்பூவும் அவரை இயக்கும் தமிழக பாஜகவினரும். மனுதர்ம நூலுக்கு எதிராகவும், அதில் உள்ள சர்ச்சைக் கருத்துகளுக்கு எதிராகவும், திருமாவளவன் கருத்து தெரிவித்த நிலையில், அதனை, திரித்து, இந்து பெண்களை திருமாவளவன் இழிவு படுத்தி விட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.


மனு தர்ம நூலில், பெண்கள் மற்றும் தலித் சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதால், அவற்றை நீக்கி, புதிய மனு தர்ம புத்தகம் எழுதும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான Sanskar Bharti ஈடுபட்ட வரலாறு தமிழக பாஜகவிற்கு தெரியவில்லை என தோன்றுகிறது.


மனுஷ்மிருதி என்றால் என்ன, இந்த நூல் எப்போது, யாரால் எதற்காக எழுதப்பட்டது. அந்த நூலில் அப்படி என்ன சர்ச்சைகள் உள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


மனுஷ்மிருதி அல்லது மனுதர்மம் என்ற நூல் கிமு 200 மற்றும் கிபி 200 ஆகிய கால கட்டத்தில் சுமார் 400 ஆண்டுகளாக பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட மத நூல் ஆகும். இந்த நூல் பற்றிய பல புராண கதைகள் இருந்தாலும், இந்த நூலே பண்டைய இந்தியாவின் சட்ட நூலாக இருந்துள்ளது. இந்து மதத்தை பின்பற்றும் மக்கள், தங்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து விதிகளையும் கொண்ட சட்ட நூலாக மனுதர்மம் இருந்துள்ளது.


முகலாய ஆட்சி முதல், பிரிட்டிஷ் ஆட்சி வரை, பல ஆட்சியாளர்களும், இந்து மக்களின் மதம் தொடர்பான பிரச்னைகளை இந்த மனுதர்ம நூலை வைத்தே, தீர்ப்பு வழங்கி வந்துள்ளனர்.
அதே நேரம் இந்த நூல் ஒரு பிற்போக்கு தனமான நூல் என்றும், இதில் உள்ள கருத்துக்கள், பெண்கள் மற்றும் தலித் மக்களை அடிமைப்படுத்துவதாக தொடர்ந்து சீர் திருத்தவாதிகளாலும், முற்போக்கு சிந்தனையாளர்களாலும் குற்றம் சாட்டப்பட்டது.

1927ஆம் ஆண்டு அம்பேத்கர் இந்த நூலை தீயிட்டுக் கொளுத்தினார். அம்பேத்கரின் சட்டம் அமலுக்கு வரும் வரை இந்த மனு நீதியே இந்தியாவின் சட்ட நூலாக இருந்தது.
சரி இந்த நூலில் அப்படி என்ன சர்ச்சைகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

முழு தகவலுக்கு வீடியோ காண:

Leave a Response

error: Content is protected !!