BJPcrime

பாஜக அலுவலகத்திற்குள் வைத்து பட்டப்பகலில் சீரழிக்கப்பட்ட இளம்பெண்..!

247views

இன்னைக்கு நாம பார்க்கப்போகிற வழக்கு. கட்சி அலுவலகத்திற்குள் வைத்தே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர்
மத்திய பிரதேச மாநிலம், பாலாகாட் மாவட்டம் பரஸ்வரா என்ற பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. உள்ளுர் பாஜக தலைவரின் மறுமகனும், பாஜக பிரமுகருமான இளைஞர் ஒருவர், அருகே இருந்த வீட்டைச் சேர்ந்த, 21 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.


பாஜக அலுவலகத்தில் உள்ள கணிப்பொறி மூலம் இலவசமாக இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி, உள்ளே அழைத்து, சிறிது நேரத்தில், அலுவலகத்தை உள்ளிருந்து பூட்டியுள்ளார்.


பின்னர் அந்த பெண்ணை, வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து, அந்த பெண் தனது பெற்றோரிடம் கூற, அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, போலீசார், அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.


இந்தச் சம்பவம் மூலம் மக்கள் பெறும் பாடம் என்னவென்றால், இலவசமாக ஒரு பொருளோ, சேவையோ கிடைக்கிறது என்றால், அந்த விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக இளம்பெண்களை, வீட்டில் இருந்து வெளியே அனுப்பும் போது, அதி கூடுதல் கவனம் தேவை. மேலும், எந்த ஒரு இடத்தையும் பாதுகாப்பான இடமாக நினைக்கக் கூடாது. அது வழிபாட்டுத் தலமாகவோ, கல்விக் கூடமாகவோ, கட்சி அலுவலகமாகவோ கூட இருக்கலாம்.

Leave a Response

error: Content is protected !!