BJPcrimeIndia

தக்காளி சூப்பில் மயக்க மருந்து: சொந்தகட்சி பெண் நிர்வாகியையே சீரழித்த பாஜக EX MLA..!

558views

இன்னைக்கு நாம பார்க்கப்போகிற வழக்கு. ஒரு எம்எல்ஏவுக்கும் ஒரு இளம்பெண்ணுக்குமான வழக்கு. டெல்லி சாகெட் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்தவர் விஜய் ஜோலி. இவர் தனது கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் நிர்வாகிக்கு, தக்காளி சூப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


ஒரு தனியார் விடுதிக்கு, கட்சி நிர்வாகியான இளம்பெண்ணை அழைத்துச் சென்ற, அந்த முன்னாள் எம்எல்ஏ, மதியம் ஒன்று 30 மணியளவில், அந்த பெண்ணுக்கு தக்காளி சூப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுது.


2 மணி நேரம் கழித்து அந்த பெண் எழுந்து பார்த்தபோது, நிர்வாண நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, குளியலறைக்கு சென்று, சுத்தப்படுத்திக் கொண்டு, எம்எல்ஏவிடம் அந்த பெண் வாக்குவாதம் செய்துள்ளார்.


இதனையடுத்து அந்த எம்எல்ஏ அந்த பெண்ணை, தனது காரில் ஏற்றிக் கொண்டு, வீட்டில் விடுவதாக சொல்லி, போகும் வழியில் வாக்குவாதம் ஏற்பட்டதால், நடு வழியில் இறக்கி விட்டுள்ளார்.
அந்த பெண்ணின் கணவருக்கு உடல்நிலை, சரியில்லாத காரணத்தை பயன்படுத்திக் கொண்டு, அந்த முன்னாள் எம்எல்ஏ இதுபோன்ற மோசமான காரியத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுது.
அதே நேரம் அந்த பெண் இதுகுறித்து, போலீசில் புகார் தெரிவித்து, அந்த முன்னாள் எம்எல்ஏ மீது, வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கு. தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, விஜய் ஜோலி, அந்த பெண் மீதே வழக்கு கொடுத்திருக்கார். அந்த பெண்ணும், அவரது கணவரும் தன்னிடம் 15 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும், 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றதாகவும், அந்த எம்எல்ஏ புகார் கொடுத்திருக்கார்.


இந்த எம்எல்ஏ, பிரதமர் மோடிக்கே நன்கு அறிமுகமானவர் என்பதோடு, பாஜகவினுடைய வெளிநாடு வாழ் பிரிவுக்கு தலைவராகவும் இருந்திருக்கார். இதனால, அந்த பெண், இவரை எதிர்த்து போராட முடியாது என்பதலா, அந்த வழக்கில இருந்து பின்வாங்கியதா சொல்லப்படுது.


இந்தச் சம்பவம் நடந்த போது, பரபரப்பா செய்தி வெளியிட்ட, ஊடகங்கள், அதற்கு பிறகு, என்ன நடந்தது என்றே சொல்லவில்லை. அந்த அளவிற்கு இந்த வழக்கு மூடி மறைக்கப்பட்டிருக்கு.


இந்த வழக்கின் மூலம் நாம் கற்க வேண்டிய பாடம், கட்சி, கொள்கை, கோட்பாடு என எந்த காரணத்தை கொண்டு, ஒரு ஆணுடன், பெண், தனியாக, ஹோட்டல் அறைக்கு செல்வது, வீட்டிற்கு செல்வது, விடுதிக்கு செல்வது போன்ற காரியங்களை தவிர்க்க வேண்டும் என்பது தான்.


எவ்வளவு கொள்கை உறுதி கொண்டவர்களாக இருந்தாலும், சபல புத்தி கொண்டவர்களாக இருந்தால், அவர்களிடம் பெண்கள் தப்ப முடியாது.
அதுவும் குறிப்பாக, புதிதாக ஒரு இடத்திற்கு பரிச்சயம் இல்லாதவர்களுடன் செல்லும் போது, அவர்கள் கொடுக்கும், குளிர்பானம், உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.


அதே போல் ஒரு இடத்திற்கு செல்லும் போது, அச்ச உணர்வோ சந்தேகமோ ஏற்பட்டால், பெண்கள் உடனடியாக தான் செல்லும் இடம் பற்றி தனது குடும்பத்தினரிடமோ, அல்லது, தோழிகளிடமோ சொல்ல வேண்டும்.
இந்த வழக்கில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், அரசியல் செல்வாக்கு படைத்தவர்களை எதிர்த்து, பாமர பெண்கள் பெரிய அளவில் எதுவும் செய்து விட முடியாது என்பது தான்.

Leave a Response

error: Content is protected !!