Indiasports

“தன்னைப்பற்றி தனியார் ஊடகத்தில் அவதூறு” – கடுப்பான பி.வி.சிந்து

270views

தனது பயிற்சியாளரிடம் மனக்கசப்பு ஏற்பட்டதாக தனியார் ஊடகத்தில் வெளியான செய்திக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே விளையாட்டுத் திறன் மற்றும் உடல் திடத்தை மேம்படுத்த இங்கிலாந்து சென்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து பயிற்சி பெற்று வருகிறார்.

இதனிடையே தேசிய முகாமில் இருந்து விலகி பிவி சிந்து இங்கிலாந்து சென்று பயிற்சி பெற்று வருவதாகவும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே அவர் இங்கிலாந்து சென்றுள்ளதாக தனியார் ஊடகம் ஒன்றின் செய்தி வெளியானது. மேலும் அவரது பயிற்சியாளர் புல்லேல கோபிசந்துடனும் பிவி சிந்துவுக்கு மனகசப்பு உள்ளதாக செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிவி சிந்து, the Gatorade Sports Science Institute (GSSI) பயிற்சியின் தேவைக்கேற்ப எனது ஊட்டச்சத்து மற்றும் உடலின் திடத்தைச் சரி செய்ய சில நாட்களுக்கு முன்பு லண்டன் வந்தேன்.

எனது குடும்பத்தின் ஒப்புதலோடுதான் நான் இங்கு வந்திருக்கிறேன். இதுகுறித்து குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனக்காக தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த பெற்றோரிடம் எனக்கு எதற்கு பிரச்சினை வரப்போகிறது.

எங்களுடையது அதிக பிணைப்பு இருக்கும் ஒரு குடும்பம். அவர்கள் எப்போதும் என்னை ஆதரிப்பார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களோடு உரையாடி வருகிறேன். மேலும், எனது பயிற்சியாளர் கோபிசந்த் உடனோ அல்லது அகாடமியில் இருக்கும் பயிற்சி வசதிகளிலோ எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் இது போன்ற பொய்யான செய்திகளைப் பரப்பி வரும் குறிப்பிட்ட ஆங்கில தினசரியின் விளையாட்டுப் பிரிவு பத்திரிகையாளர், எழுதுவதற்கு முன் உண்மைகளை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் இதை நிறுத்தவில்லையென்றால் அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CGjaSaHBOL6/?utm_source=ig_web_copy_link

Leave a Response

error: Content is protected !!