crimeதிருவாரூர்

குடிபோதையில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்..! – மன்னார்குடி அருகே பயங்கரம்

166views

குடிபோதையில் சுயநினைவை இழந்து காட்டுமிராண்டிகளாக மாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மன்னார்குடி அருகே ஒரு பெண் தனது குடிபோதை கணவராலேயே வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தென்பரை கிராமத்தைச் சேர்ந்த பால்சாமி (60). அவரது மனைவி மாரியம்மாள் (52). கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கணவன் பால்சாமி மது குடித்து விட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாரியம்மாள் இன்று மாலை வயல் வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மது போதையில் அங்கு வந்த பால்சாமி அவரது மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த பால்சாமி மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மனைவியின் கழுத்து, தாடை, உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் பால்சாமி தனது வீட்டிற்கு வந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பால்சாமியின் உளறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்;து பார்த்தபோது பால்சாமி விஷம் அருந்தியது தெரிய வந்தது பின்னர் பால்சாமி சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபப்ட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமக்கோட்டை போலீசார் உயிரிழந்த மாரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னர்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response

error: Content is protected !!