chennaicrime

“நான் சாகப்போறேன்”.. மனைவிக்கு போன் செய்துவிட்டு தூக்கில் தொங்கிய போலீஸ்.. -அதிரவைக்கும் காரணம்..!

268views

நான் தற்கொலை செஞ்சுக்க போறேன் என்று மனைவியிடம் போன் செய்து கூறிவிட்டு சப்-இன்ஸ்பெக்டர் தூக்கில் தொங்கிய சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம், புல்லாபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மமூர்த்தி (58). இவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சென்னை அயப்பாக்கத்தில் தங்கியிருந்துள்ளனர்.

மனைவியிடம் செல்போனில் பேசிய நரசிம்மமூர்த்தி, நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். அதனால், அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் சென்னை அயப்பாக்கத்திலிருந்து கீழ்ப்பாக்கத்துக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. பின்னர், இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது நரசிம்மமூர்த்தி, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரைக் கீழே இறக்கிய போலீஸார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மமூர்த்தி, இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் நரசிம்மமூர்த்தி, சென்னை பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவரின் குடும்பம் சென்னை அயப்பாக்கத்தில் குடியிருந்தது.

கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் நரசிம்மமூர்த்திக்கு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக நரசிம்மமூரத்திக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நலம் பாதிப்பு காரணமாக மனஉளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் நரசிம்மமூர்த்தி மரணத்துக்கு இன்னொரு காரணம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நரசிம்மமூர்த்தி, சிகிச்சை பெற்றபோது, இனிமேல் மது அருந்தாதீர்கள் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், நரசிம்மமூர்த்தி, மீண்டும் மது அருந்தியுள்ளார். அதைக் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். அதுவும் அவரின் தற்கொலை முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மமூர்த்தி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response

error: Content is protected !!