cinematamilnaduUncategorized

பாடகர் SPB-யின் உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்..!

389views

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள MGM ஹெல்த்கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் SPB-க்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் ஐசியூ பிரிவில் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் SPB-யின் உடல்நிலை பற்றி அவருடைய மகன் சரண், ட்விட்டரில் தெரிவித்ததாவது:

SPB-ன் உடல் நிலை சீராக இருக்கிறது. இயன்முறை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் ICU பிரிவில் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. விரைவில் இவற்றின் உதவி தேவையில்லாத நிலைக்கு அவர் வருவார் என நம்புகிறோம். MGM மருத்துவமனைக் குழுவினருக்கும் அவருக்காகப் பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

Leave a Response

error: Content is protected !!