BJPcinemaPolitics

“சினிமாவில் வசனம் பேசுறமாதிரி விளையாடாதீங்க” – சூர்யாவுக்கு வானதி அட்வைஸ்..!

337views

சினிமாவில் வசனம் பேசுவதைப் போல மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம் என வானதி ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு பயத்தால், கடந்த சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. பல அரசியல் தலைவர்கள், நீட் தேர்வு வேண்டாம் என கண்டனக் குரலை பதிவிட்டுவந்தனர். இந்த நிலையில், நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், “நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுத போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போல அவலம் வேறு இல்லை. கரோனா அச்சம் போன்ற உயிர்பயம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்களது நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

சூர்யாவின் இந்த அறிக்கைக்கு அரசியல் தலைவர்கள் சிலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த வானதி ஸ்ரீநிவாசன், ”சினிமாவில் வசனம் பேசுவதை போல மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். மாணவர்களின் தற்கொலையை தொடர்ந்து போட்டி தேர்வுகளே கூடாது என்பதுபோல சூர்யா பேசுகிறார்” என்று கூறியுள்ளார்.

Leave a Response

error: Content is protected !!