congressIndiaPolitics

டெல்லி கலவரம்: `போலீசின் கேலிக்கூத்து’ – ப.சிதம்பரம் விளாசல்

85views

டெல்லி காவல்துறையின் நடவடிக்கை, குற்றவியல் நீதி முறையை கேலிக்குள்ளாக்கியுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் CAA சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, பாஜக டெல்லி தலைவர் கபில் மிஸ்ராவின் தூண்டுதலினால் வடகிழக்கு பகுதிகளில் பிப்ரவரி 24-26 வரை பயங்கர கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர், 581 பேர் காயமடைந்தனர்.

இந்த கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. CAA வுக்கு எதிராக அமைதியாக நடைபெற்ற தொடர் போராட்டத்தில், பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் கலவரத்தை ஏற்படுத்தியதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை எழுப்பினர்.

இந்த நிலையில், சிபிஐஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, சுவராஜ் அபியன் யோகேந்திர யாதவ் மற்றும் பல அரசியல் தலைவர்களின் பெயரை சேர்த்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், டெல்லி காவல்துறை நடவடிக்கை குற்றவியல் நீதி முறையை “கேலிக்குள்ளாகியுள்ளது என தெரிவித்து உள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர்,

“தகவல் மற்றும் குற்றப்பத்திரிகைக்கிடையில் விசாரணை மற்றும் உறுதிப்படுத்தல் எனப்படும் முக்கியமான படிகள் உள்ளன என்பதை டெல்லி காவல்துறை மறந்துவிட்டதா?” முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் டெல்லி கலவர வழக்கில் துணை குற்றப்பத்திரிகையில் சீதாராம் யெச்சூரி மற்றும் பல அறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பெயரை சேர்ப்பதன் மூலம் டெல்லி காவல்துறை, குற்றவியல் நீதி முறையை கேலிக்குள்ளாக்கியுள்ளது, “என்று அவர் விமர்சித்துள்ளார்.

Leave a Response

error: Content is protected !!