article

மோடியின் மனதில் இடம் பிடிக்க, அவதூறு பரப்பும் வேலையில் இறங்கிய பிரபல ஊடகவியலாளர்கள்!

1Kviews

 மோடிக்கு யார் அதிகம் ஜால்ரா தட்டுவது என்ற போட்டி, தேசிய ஆங்கில ஊடகங்கள் என்று சொல்லக் கூடிய உயர்வகுப்பினரால் நடத்தப்படும் வலதுசாரி ஊடகங்களில் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. டைம்ஸ் நவ், ரிபப்ளிக், இந்தியா டுடே இடையே இந்த போட்டி தீவிரம் அடைந்து மோடிக்கு ஆதரவாக அவதூறு செய்திகளை அள்ளிவிட்டு வருகின்றனர்.

இந்தியா டுடே தொலைக்காட்சியின் செய்தி இயக்குநர் ராகுல் கன்வால் என்பவர், மோடிக்கு ஆதரவாக செய்தி போடுகிறேன் பேர்வழி என்ற பெயரில், அமெரிக்கா கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்தால், முதலில் இந்தியாவிற்குத் தான் தருவேன் என டொனால்டு டிரம்ப் கூறியதாக கதை அளந்து விட்டார்.

பாக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த தொலைப்பேசி பேட்டியில், டிரம்ப் அப்படி சொன்னதாகவும் ஆதாரம் கொடுத்தார். ஆனால் அப்படி எந்த விசயத்தையும் டிரம்ப் சொல்லவில்லை என்பதை ஆல்ட் நியூஸ் இணையதளம் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது.

டிரம்புக்கு பயந்து, மோடி மருந்து கொடுத்து விட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதனை சமாளிக்கும் விதமாக, ராகுல் கன்வால் இப்படி ஒரு கதையை அளந்து விட்டுள்ளார். மோடிக்கு ஆதரவாக பாஜகவினர் பேசுவதை போய், இப்போது ஊடகத்தின் தலைமைப் பதவிகளில் உள்ளவர்களே அவதூறுகளை அள்ளிவிடுவது வாடிக்கையாகியுள்ளது.

  இதைவிட பிரமாதமான ஒரு சம்பவத்தையும் பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் செய்துள்ளனர்.

அதாவது, இந்தியா மருந்து தருவதாக ஒப்புக்கொள்வதற்கு முன்பு அமெரிக்காவிடம் 3 நிபந்தனைகள் விதித்ததாகவும், அந்த 3 நிபந்தனைகளையும் அமெரிக்கா 24 மணி நேரத்தில் ஒப்புக் கொண்டதாகவும் ஒரு பொய்ச்செய்தியை பாஜக ஆதரவாளர் டுவிட்டரில் தெரிவிக்க, அதனை உண்மையென நம்பி சில மணி நேரத்திலேயே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்துள்ளனர்.

அந்த 3 நிபந்தனைகள் இவை தான். அதாவது, ஒன்று,  இந்திய மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் எந்த தடையும் இன்றி நுழைய அனுமதி அளிக்க வேண்டும். இரண்டாவதாக, இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் எப்டிஏ துறை விதித்த வரிகளை ரத்து செய்ய வேண்டும்.

 இதற்கு பிறகு இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அமெரிக்கா எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது.

இப்படி 3 நிபந்தனைகளை இந்தியா விதித்ததாகவும், அதனை ஏற்றுக்கொண்ட பிறகு தான் அமெரிக்காவிற்கு மருந்து கொடுக்க இந்தியா சம்மதம் தெரிவித்ததாகவும் சமாளித்துள்ளனர்.

இந்த அவதூறுகள், மதுவந்தி அண்மையில் தெரிவித்த முட்டாள்தனமான கருத்துக்களுக்கு சற்றும் குறைவில்லாதவை என நிரூபிக்கப்பட்டுள்ளன.

செய்தியை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க…

https://www.altnews.in/false-rahul-kanwals-claim-about-trump-suggesting-early-access-of-covid-19-vaccine-to-india/

Leave a Response

error: Content is protected !!