திண்டுக்கல்மாவட்டம்

பழனி முருக பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் இஸ்லாமியர்கள்!

934views

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பழனி திகழ்ந்து வருகிறது.  பழனி தைப்பூச விழாவிற்கு லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

அவர்களுக்கு தேவையான பல பொருட்களை, பழனி அடிவாரம் பகுதியில், கடைகள் நடத்தி வரும் இஸ்லாமியர்கள் விற்பனை செய்கின்றனர்.

பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் தேங்காய்களை சப்ளை செய்வதில் இஸ்லாமிய வியாபாரிகளின் பங்கு கணிசமாக உள்ளது.

இந்நிலையில் இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் காப்பான் அறக்கட்டளை சார்பில், பசியில்லா பழனி என்ற முழக்கத்தோடு, பழனி மலைக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் இலவசமாக வினியோகிக்கப்பட்டன.

முன்னதாக காப்பான் அறக்கட்டளை சார்பில், சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Leave a Response

error: Content is protected !!