சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்! யார் இந்த அன்புச்செல்வன்?

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர், அதிமுக நிர்வாகி, சினிமா தயாரிப்பாளர், சினிமா பைனான்சியர் என பல அடையாளங்களை கொண்டிருந்தாலும், கந்து வட்டி, அன்புச் செழியன் என்றே இவரை திரை வட்டாரத்தில் அழைக்கின்றனர்.
100 கோடி ரூபாய் வேண்டுமானாலும், சில மணி நேரங்களில் ஏற்பாடு செய்து தருவது தான் இவரது பலம் என கூறப்படுகிறது.
வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு, பணத்தை கொடுக்காவிட்டால், அவர்களை கழிவறையில் அடைத்து பாடம் புகட்டி விடுவார் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
5 ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு தனது தொழிலை மதுரையில் தொடங்கிய அன்புச் செல்வன், அங்குள்ள வியாபாரிகளுக்கு கடன் கொடுத்தது போக, சினிமாக்களுக்கும் கடன் கொடுக்க தொடங்கியுள்ளார்.
பின்னர் சென்னையில் பல தயாரிப்பாளர்கள் இவரை அணுகத் தொடங்கி, இன்று இவரிடம் கடன் பெறாதவர்களே இல்லை என்ற நிலையை அடைந்துள்ளார்.
தனுஷின் தங்க மகன் உள்ளிட்ட பல படங்களை இவரே தயாரித்துள்ளார்.
சசிக்குமாரின் உறவினரும், சினிமா தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட போது, முதன்முறையாக அன்புச் செல்வனின் பெயர் அடிபட்டது.
தற்போது, இவரது சென்னை, மதுரை அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 57 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
2வது நாளாக சோதனை தொடர்ந்த நிலையில், இறுதியில் தான் முழு விபரம் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
இதனிடையே இவரது அலுவலகங்களில் இருந்து கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக A.N.I செய்தி நிறுவனம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.