BJPCentral GovtcongresselectionIndiaPoliticspublic interestsocial mediastoryvideosworld

ராகுல்காந்தி ஒரு டியூப் லைட் – மோடி கிண்டல்

993views

மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியதை குறிப்பிட்டார்.

இன்னும் 6 மாதங்களில் பிரதமர் மோடியை இளைஞர்கள் குச்சியால் அடிப்பார்கள் என அந்த தலைவர் பேசியதாக மோடி தெரிவித்தார்.

அப்படி அடித்தால், அதனை தாங்கிக் கொள்ளும் வகையில், இனி மேல், சூரிய நமஸ்காரம் செய்வதை அதிகரிக்கப் போவதாக அவர் பேசினார்.

இதனை கேட்ட பாஜக உறுப்பினர்கள் மேசையை தட்டி, சிரித்தனர்.

மேலும் ராகுல் காந்தியை டியூப் லைட் என மோடி கிண்டல் செய்தார். மோடி பேசிக் கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி குறிக்கிட்டார்.

அப்போது பேசிய மோடி, தான் பேச ஆரம்பித்து, 40 நிமிடங்கள் ஆகிவிட்டதாகவும், இப்போது தான் அந்த குரல் மற்றவர்களுக்கு கேட்கிறது என்றும், இப்படித் தான் பல டியூப் லைட்டுகள் இருக்கின்றன என்றும் விமர்சித்தார்.

ராகுல் காந்தியை மோடி கிண்டல் செய்ததற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து மக்களவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வேலைவாய்ப்பின்மை, நாட்டின் பொருளாதாரம் குறித்து கேள்வி எழுப்பினால்,மோடி, பாகிஸ்தானை பற்றியும், ஜவஹர்லால் நேருவை பற்றியும் பேசுகிறார் என பதிலடி கொடுத்தார்.

Leave a Response

error: Content is protected !!