BJPCentral GovtIndiapublic interestsocial mediavideosworld

டெல்லி ஷாகின்பாக் போராட்டத்திற்குள், புர்காவோடு புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற பாஜக ஆதரவு பெண் ஒருவரை, போராட்டக்காரர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.

1.06Kviews

ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் நடத்த வந்தாரா என விசாரித்து வருகின்றனர்.

டெல்லி ஷாகின்பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்று பிடிபட்டனர்.

இதில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பே பிடிபட்டார். மற்றொருவர் சுட்டதில் மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல், டெல்லி காவல்துறை காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் புர்கா அணிந்தவாறு பங்கேற்ற பெண் ஒருவரின் நடத்தையில் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் விசாரித்த போது, அவர் போரட்டம் நடத்த வரவில்லை என்பது தெரிந்தது.

இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அவர் ஆயுதங்களை மறைத்து வைத்து, ஏதேனும் தாக்குதல் நடத்தலாம் என்பதால், பெரும் சலசலப்பு எழுந்தது.

இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், அந்த பெண்ணை, அங்கிருந்து மீட்டு கொண்டு சென்றனர்.

டெல்லி ஷாகின்பாக் போராட்டத்தில் பிரியாணி வினியோகிக்கப்படுவதாகவும், அதற்காகவே அங்கு மக்கள் கூடுகின்றனர் போன்ற கருத்துக்களை பாஜகவினர் கூறி வந்த நிலையில், கபூர் என்ற பெண் பிரியாணி சாப்பிடவா அங்கு சென்றார் என்ற கேள்வியை டுவிட்டர் வாசிகள் எழுப்பி வருகின்றனர்.

Leave a Response

error: Content is protected !!