admkBJPchennaiPoliticsstoryworldஉலகம்

கழுத்தை நெருங்கும் ஊழல் வழக்கு! மதவெறியை தூண்டும் அமைச்சர்! பின்னணி இது தான்!

16.9Kviews

ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் திமுக மனு அளித்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்து வந்த பாதை, அவர் பேச்சின் பின்னணி குறித்து பார்க்கலாம்.

அருப்புக் கோட்டை அருகே உள்ள திருத்தங்கலில், 10 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, அதற்கு மேல் படிக்க, வசதி இல்லாமலும், படிப்பு ஏறாமாலும் போனதால், சக்திவேல் கடையில், வாடகைக்கு சைக்கிள் எடுத்து, சினிமா போஸ்டர் ஒட்டி தனது வாழ்க்கையை ஓட்டி வந்தார் ராஜேந்திர பாலாஜி.

எம்ஜிஆர் ரசிகராக இருந்ததால், அதிமுகவில் இருந்த அவர், அதிமுக போஸ்டர்களையும் அப்பகுதி முழுவதும் ஒட்டி வந்ததோடு, எம்எல்ஏ உள்ளிட்டவர்களின் வீட்டிற்கு சென்று காய்கறிகள் வாங்கித் கொடுத்தல் உள்ளிட்ட எடுபிடி வேலைகளையும் செய்து வந்தார்.

இவரது அப்பா ஆசாரியாக இருந்த நிலையில், உடன் பிறந்த சகோதரிகளோ, பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த காலகட்டத்தில், சைக்கிளில் இருந்து ஆட்டோவிற்கு பிரமோஷன் ஆனார். பெரியோர்களே, தாய்மார்களே, என அதிமுகவின் நிகழ்ச்சிகளை ஆட்டோவில் சென்று மைக்கில் கூவி விளம்பரம் செய்யும் பணி இவருக்கு கிட்டியது.

திடீரென 1996 ஆம் ஆண்டு இவருக்கு ஜாக்பாட் அடித்தது. அன்று போஸ்டர்களை கீழே போட்ட, ராஜேந்திர பாலாஜிக்கு, அடுத்தடுத்து போஸ்டிங்கள் அவர், நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கிடைத்தன.

திருத்தங்கல் பேரூராட்சி கவுன்சிலராகி, பேரூராட்சி துணைத் தலைவரான இவர், அந்த ஊர், நகராட்சியாக மாற்றப்பட்டபோது, நகராட்சி துணை சேர்மன் ஆனார்.

சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர், அமைச்சர் என அடுத்தடுத்த அற்புதங்கள் 2 மாதங்களில் நடந்தன.

சோத்துக்கே போஸ்டர் ஒட்டிய ராஜேந்திர பாலாஜி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது, தனக்கு 50 லட்சம் ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவித்தது சுற்றி இருந்தோரை தலை சுற்ற வைத்தது.

அமைச்சரான பிறகு, ராஜபாளையம் தேவதானம் என்ற ஊரில் சுமார் 76 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கியது, மேலும் சர்ச்சையானது.

அதன் சந்தை மதிப்பு கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. எப்படி அவர், இந்த நிலத்தை வாங்கினார் என கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, போதிய முகாந்திரம் இல்லை என கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

மீண்டும் உரிய ஆவணங்களோடு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் மீது, மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது, 2011 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை, ராஜேந்திர பாலாஜியின் சொத்து விபரங்களை தாக்கல் செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்த போது, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, சார்பில் ராஜேந்திர பாலாஜியின் சொத்து மதிப்பு குறிப்பிட்ட கால அளவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட உயர வில்லை என தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், 750 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையை ஜனவரி 24 ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

ஜனவரி 23ஆம் தேதி தான் ராஜேந்திர பாலாஜி, ரஜினிகாந்தின் கருத்திற்கு ஆதரவாக, பெரியாரை விமர்சித்து கருத்து தெரிவித்தார்.

ஆனால் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு நேர் எதிரான கருத்தை செல்லூர் ராஜு தெரிவித்தார்.

அண்மைக் காலமாக பாஜகவின் சிந்தாந்தத்திற்கு ஆதரவாகவும், ரஜினிக்கு ஆதரவாகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் ராஜேந்திர பாலாஜி பேசி வருவது, அவர் மீதான வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளத்தான் என கூறப்படுகிறது.

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் மனது குளிரும்படி பேசினால், உயர்நீதிமன்ற வழக்கு பிடியில் இருந்து விடுபடலாம் என சிலர் கூற, அதனையே ராஜேந்திர பாலாஜி பின்பற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Response

error: Content is protected !!