Gamespublic interestsportsstoryvideosworldஉலகம்கலாச்சாரம்

ஒலிம்பிக் வீரருக்கு வீடு கட்ட நிலம் வழங்கிய தம்பதி – மதம் கடந்த மனிதநேயம்!

522views

ஒலிம்பிக் வீரர் முகமது அனஸ் யஹ்யாவிற்கு, வீடு கட்டுவதற்காக, கேரளாவைச் சேர்ந்த தம்பதி, நிலம் வழங்கியது, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

2016 ஓலிம்பிக் போட்டி, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, பல்வேறு பதக்கங்களை பெற்றவர் அனஸ்.

கேரளா மாநிலம் கொல்லம், நிலமேல் பகுதியைச் சேர்ந்த இவரை கவுரவித்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் இவருக்கு பைக் வழங்கப்பட்டது.

ஆனால் அந்த பைக்கில் வீட்டிற்கு செல்லும் அளவிற்கு, அவரது வீட்டிற்கு சாலை வசதியோ, வீட்டில் பைக்கை நிறுத்துவதற்கான வசதியோ இல்லை.

இந்நிலையில், அவர் சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள, அதே ஊரைச் சேர்ந்த, சசிதரன் நாயர் மற்றும் அவரது மனைவி வினிதா குமாரி ஆகியோர் முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு, 5 சென்ட் நிலம் வழங்கினர்.

இதற்கும் அனஸையோ, அவர்களது குடும்பத்தினரையோ, அவர்கள் நேரில் பார்த்தது கூட இல்லையாம்.

கொல்லம் மாவட்டத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இருந்தும், மதம் கடந்து, அவருக்கு உதவிய சசிதரன், வினிதா தம்பதியை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

அவருக்கு கொடுக்கப்பட்ட நிலத்தில், மாத்யமன் ஊடகம் மற்றும் கேரள திரைத்துறை சார்பில், அனசுக்கு வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Response

error: Content is protected !!