Foodshealthpublic interestsocial mediavideosworldஉலகம்

பாம்பு வைரஸ் தாக்குதல்! ஈரான் மீது இஸ்ரேல் நிறுவனம் குற்றச்சாட்டு!

915views

இஸ்ரேல் தொழிற்கூடங்களில் உள்ள கணிணிகளை முடக்க ஈரான் புதிய வைரஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

தொழில்நுட்பத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு இணையான வல்லுநர்களை கொண்டுள்ள நாடு ஈரான்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இணையதளங்களை அவ்வப்போது முடக்கி, ஈரான் ஹேக்கர்கள் மிரட்டல் விடுப்பார்கள்.

இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள சைபர் செக்கியூரிட்டி நிறுவனம் ஒன்று, ஈரான் மீது புதிய குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள தொழில் கூடங்களை முடக்க, ஈரான் புதிய வைரஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

ஈரான் கண்டுபிடித்ததாக சொல்லப்படும் அந்த ransomwareக்கு Snake அதாவது பாம்பு என இஸ்ரேல் நிறுவனம் பெயரிட்டுள்ளது.

இந்த புதிய ரேன்சம்வேர், encrypted கோப்புகளை அழித்துவிடும் என இஸ்ரேல் அச்சம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய தாக்குதலால் தொழிற் கூடங்களின் உற்பத்தி பிரிவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Response

error: Content is protected !!