crimeFoodshealthIndiasocial mediaTravelvideosworldஉலகம்சுற்றுலா

கொரோனா வைரஸ் எப்படி பரவும்? சீனா விளக்கம்!

1.23Kviews

கொரோனா வைரஸ் சீனாவை மட்டுமின்றி உலகையே உலுக்கி வருகிறது.

சீனாவில் 132 பேர் இதுவரை உயிரிழந்த நிலையில், 6 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்னும் 10 நாட்களில் உயிரிழப்பு பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

1239 நோயாளிகள் கவலைக்கிடமாக இருப்பதாக சீனாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 9239 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என்றும், பெரிய எண்ணிக்கையில் இணைந்து பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சீனாவில் தற்போது நடைமுறையில் உள்ள பொது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வரும் பயணிகள் சோதிக்கப்பட்டு, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்த வைரசை கட்டுப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முழு வீச்சில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் மனிதர்கள் நெருங்கிப் பழகும் போது, ஒருவரிடம் இருந்தால், மற்றொருவருக்கு பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் வராமல் தடுப்பதும், வந்த உடனேயே அவசர சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம் இதனை தடுக்க முடியும் என கூறப்படுகிறது. காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் ஆகியவை கொரோனா வைரசின் அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் 2017 ஆம் ஆண்டு ஒரு வகையான வௌவால்களிடம் இருந்தது கண்டறியப்பட்டது. கூறப்படுகிறது.

Leave a Response

error: Content is protected !!