BJPcinemacrimeentertainmentfact checkfeaturedFoodsPolitics

புரூடா விட்ட பா.ஜ.க. எம்.பி. வசமாக மாட்டிக் கொண்டார்!

382views

டெல்லியில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், அரசு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக பா.ஜ.க. எம்பி தெரிவித்த குற்றச்சாட்டு, பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேற்கு டெல்லியில் 54 பள்ளிவாசல்கள் மற்றும் அடக்கத்தலங்கள் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக பா.ஜ.க. எம்பி பர்வேஷ் வர்மா என்பவர் எழுப்பிய குற்றச்சாட்டு அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து டெல்லி மாநில அரசின் சிறுபான்மை கமிஷன் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து விசாரித்தது.

அந்த கமிஷனின் விசாரணையில் பா.ஜ.க. எம்பி தெரிவித்த குற்றச்சாட்டு பொய் என நிரூபணம் ஆகியுள்ளது.

அந்த எம்பி குறிப்பிட்ட 54 பள்ளிவாசல்கள் மற்றும் அடக்கத்தலங்களுக்கு சென்ற உண்மை அறியும் குழு, ஆவணங்களை வாங்கி சரிபார்த்ததில் அனைத்து பள்ளி வாசல்கள் மற்றும் அடக்கத்தலங்களும் உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியோடு இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

அதே நேரம் மேற்கு டெல்லியில் ஒரு கோயில் அரசு நிலத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்டிருப்பதும், அந்த கோவிலின் சுவற்றில் பா.ஜ.க. எம்.பி பர்வேஷ் வர்மாவின் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் டெல்லி மாநில அரசின் சிறுபான்மை கமிஷன் அளித்துள்ள பரிந்துரையில், பா.ஜ.க. எம்பி. பர்வேஷ் வர்மா, குறிப்பிட்டுள்ள 54 பள்ளிவாசல்களின் பெயர்களில் ஒரே பெயரை 8 இடங்களுக்கு பயன்படுத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால், மத ரீதியாக வன்முறையை ஏற்படுத்தவே பா.ஜ.க. எம்.பி அவதூறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருவதாகவும் சிறுபான்மை கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.

அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

Leave a Response

error: Content is protected !!