articlecinemacrimeentertainmentfeaturedFoods

மக்கள் தொகை கணக்கெடுப்பில் பகீர் புதுமை! எதிர்ப்புகள் கிளம்பும் என்பது நிச்சயம்!!

246views

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு Android ஆப் மூலம் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கணக்கெடுக்கும் அலுவலர்கள் தங்களது Android மொபைல் போனில் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து கொள்வார்கள். அதில் மக்களின் தகவல்களை பதிவேற்றம் செய்வார்கள். அந்த தகவல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை மைய டேட்டா பேசிற்கு உடனடியாக சென்று விடும்.

வரும் இரண்டு மாதங்களில் 50 லட்சம் பேரிடம் சோதனை முயற்சியாக கணக்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறைகள் களையப்பட்டு, 2021 பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு தொடங்கும்.

A3 காகித தாள்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு, பின்னர் அவற்றை ஸ்கேன் செய்து, புதிய மென்பொருளில் சேமிப்பது தான் கடந்த கால நடைமுறை. ஆனால் இதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறி புதிய முறையில் கணக்கெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த புதிய ஆப்பை இணையதள வசதி இல்லாத BASIC போன்களில் கூட பயன்படுத்தலாம் என்றும், இந்த ஆப் கடவுச் சொல் மூலம் பாதுகாக்கப்படும் என்றும், 18 மொழிகள் இந்த ஆப்பில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வீடுகளில் எத்தனை பேர் இணையதளம் பயன்படுத்துகின்றனர் போன்ற புதிய கேள்விகளும், கணக்கெடுப்பில் இடம் பெறும் என தெரிகிறது.

மக்களின் தனிப்பட்ட தகவல்கள் தொழில்நுட்ப ரீதியாக பாதுகாக்கப்படும் என்றும், இந்த தகவல்களை யாரும் திருடாதவாறு அரசு கூடுதல் அக்கறை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 கட்டங்களாக கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்றும், முதல் கட்டமாக 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்றும், பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மறு ஆய்வு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே டிஜிட்டல் இந்தியா திட்டத்தை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மக்களின் தனிப்பட்ட அனைத்து அடிப்படைத் தகவல்களையும், Android ஆப் ஆப்களில் பதிவேற்றம் செய்வது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response

error: Content is protected !!